யாழில் கையெழுத்து போராட்டம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
சம உரிமை இயக்கம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்,
காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனத்தவருக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்புக்காக போராடுவோம் போன்றவற்றை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Post a Comment