பிரகீத் படுகொலை -அடுத்து கோத்தா?
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக அனுர அரசு குற்றஞ்சுமத்தியுள்ளது.
அதேபோன்று அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தனர். விளக்கமறியில் வைத்தனர். சாட்சியங்களை திரட்டும் திறமையான அதிகாரிகளுக்கு பதிலாக திறமையற்ற அதிகாரிகளை பதவிகளுக்கு அமர்த்தினார்கள்.
ரணில் -ராஜபக்ச தரப்பு ஊழல் மோசடியில் ஈடுபட்டது ஒருபுறம் இருக்க காவல்துறை திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகிவற்றை குற்றவாளிகளை பாதுகாப்பதற்காகவே பயன்படுத்தினார்கள்.
பிரகீத் எக்னெலிகொட காணமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது சி.ஐ.டியின் பணிப்பாளர் ஷானி அபேசேகர முக்கிய சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார். இதற்கு அவரது மனைவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே கொலை குற்றச்சாட்டுக்களிற்குள்ளான இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஒன்பது உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு தரப்பு சாட்சியிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், சாட்சியங்கள் தொடர்பான விசாரணை ஒகஸ்ட் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிரபல ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கில் சானி அபேசேகரவும் ஒரு சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார்.
தென்னிலங்கையில் இணையத்தள ஊடகவியலாளராக செயற்பட்ட பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010ஆம் ஆண்டு கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டு மட்டக்களப்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகின்றது.
Post a Comment