ரணில் காலத்திலும் வவுனியாவில் சிங்களவருக்கு காணி!
கடந்த ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் வவுனியாவின் வெடிவைத்த கல் கிராமத்தை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரை வார்த்தமை அம்பலமாகியுள்ளது.
அப்போதைய வெடிவைத்த கல் கிராம அலுவலர் மற்றும் அப்போதைய உதவிப்பிரதேச செயலாளரும் தற்போதைய பிரதேச செயலாளருமாகிய கலாஞ்சலி என்பவராலும் திரிவைச்சகுளம் தமிழர் நிலம் அந்தர்வெவ எனும் சிங்களப் பெயரில் கமக்கார அமைப்பு உருவாக்கப்பட்டு 23 சிங்களக்குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமை அம்பலமாகியுள்ளது.
ஐந்தும் ஐந்துக்கும் குறைவான ஏக்கர் அளவில் மொத்தமாக 83ஏக்கர் வயற்காணிக்கான உரம் வழங்குவதற்காக சிங்கள குடியேற்றவாசிகளது பெயர் பட்டியலில் கையொப்பமிடப்பட்டு சிபார்சு செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
'படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்' எனும் தொனிப் பொருளில் நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல், சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
Post a Comment