புதைகுழிகளுள் பொதி செய்த மனித எச்சங்கள்?
செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டிலிருந்து அடையாளம் காணப்பட்ட பொலித்தின் பை ஒன்றினுள் எலும்புக்குவியல்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றன.
கிருசாந்தி படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட படைச்சிப்பாய் மேலும் பல மனித புதைகுழிகள் இருப்பதாகவும் அவற்றினை அடையாளம் காண்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
எனினும் பின்னர் அவர் அடையாளங்காண்பித்த செம்மணி கோயில் கிணறு உள்ளிட்ட பல இடங்களில் மனித எலும்புக்கூடுகள் காணப்படவில்லை.அவை இடமாற்றப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய ஆய்வின் போது அடையாளம் காணப்பட்ட பொலித்தின் பை ஒன்றினுள் எலும்புக்குவியல்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.
Post a Comment