யாழில். கிணற்று கட்டில் படுத்து தூங்கியவர் , கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் கிணற்று கட்டில் படுத்து தூங்கியவர் , கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

மானிப்பாய் பகுதியை சேர்ந்த கணேசராசா சுபாகரன் என்பவரே அவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்று கட்டில் படுத்து தூங்கியுள்ளார். அந்நிலையில் மறுநாள் காலையில் அவரது சடலம் கிணற்றினுள் மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்  

No comments