சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட இந்தியர் உள்ளிட்ட இருவர் கைது
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட இந்தியர் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை கடற்படையினர் வழிமறித்து சோதனையிட்டனர். அதன் போது படகினுள் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருவர் பயணித்தமையை அவதானித்த கடற்படையினர் அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் போது ஒருவர் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் , மற்றைய நபர் இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் என கடற்படையினரின் விசாரணைகளில் தெரிய வந்ததை அடுத்து இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி வந்த நிலையில் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மன்னார் பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்
Post a Comment