பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்று முடிந்த தமிழர் விளையாட்டு விழா 2025

TRO மாபெரும் தமிழர் விளையாட்டு விழா 2025 பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் இன்று Rounsdhaw playing மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி உள்ளது.

பொதுச்சுடரினை நெதர்லாந்து நாட்டின் செயற்பாட்டாளர் ஶ்ரீ ரஞ்சனி அவர்கள் ஏற்றி வைத்தார்கள். பிரித்தானிய தேசியக்கொடியினை பிரித்தானிய இளையோர் அமைப்பின் துணை பொறுப்பாளர் கலை அரசி அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.

தமிழீழ தேசியக்கொடியினை இன்றய பிரதம விருந்தினரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நெதர்லாந்து நாட்டின் பொறுப்பாளர் திரு ஜெயா அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.

ஈகைச் சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நெதர்லாந்து கிளை மகளிர் ஒருங்கமைப்பாளர் சாந்தினி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், துடுப்பாட்டம் மற்றும் சிறுவர் விளையாட்டுகள் என பலவகை விளையாட்டுகள் இடம்பெற்றன.

No comments