உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா தாக்குதல்: 50 பேர் காயம்!


உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான லூசியாவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நான்கு மாவட்டங்களில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதல்களில் ட்டத்தட்ட 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று கார்கிவ் ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் டெலிகிராமில் எழுதினார்.

தாக்குதல்களில் குடியிருப்புக் கட்டிடங்கள், பொதுமக்களின் உட்கட்டமைப்புகள் மற்றும் வாகனங்கள் என்பன தீப்பிடித்து கடுமையாகச் சேதமடைந்தன என்று அவர் மேலும் கூறினார்.

நகரின் நான்கு முக்கிய மாவட்டங்களில் 12 இடங்களில் ரஷ்ய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக மேயர் இஹோர் தெரெகோவ் டெலிகிராமில் ஒரு பதிவில் எழுதினார்.

No comments