ஒரு புறம் பேச்சுவார்த்தை: மறுபுறம் தாக்குதல்!
துருக்கியில் ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடத்துகொண்டிருக்க மறுபுறம் உக்ரைனில் வடகிழக்கு உக்ரைன் பிராந்தியமான சுமியில் ஒரு ரஷ்ய ட்ரோன் ஒரு சிற்றுந்து மீது மோதியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர்.
துருக்கி இஸ்தான்புல் நகரில் ரஷ்யாவும் உக்ரைனும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை இந்தத் தாக்குதல் நடந்தது.
சுமி பகுதியில் உள்ள உக்ரேனிய இராணுவ உபகரணங்கள் நிறுத்தும் பகுதியை ரஷ்யப் படைகள் ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் டாஸ் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை துருக்கியில் நடந்த ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகளின் சந்திப்பு ஒரு தற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது.
கடந்த பிப்ரவரி 2022 இல் ரஷ்யா தொடங்கிய போரின் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையிலான முதல் நேரடி உரையாடல் இதுவாகும்.
Post a Comment