புதிய போப்பாக போப் லியோ XIV தேர்ந்தெடுக்கப்பட்டார்!


கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக அமெரிக்காவைச் சேர்ந்த ரொபேர்ட் பிரீவோல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் போப் லியோ  XIV என்று அழைப்படுவார்.

இவர் திருச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க போப்பாண்டவர்.

69 வயதான ரொபேர்ட் பிரீவோல்ட் , செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரின் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டார்.

உங்கள் அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும் என்று அவர் வத்திக்கான் பால்கனியில் இருந்து கூறினார்.

சிகாகோவில் பிறந்த பிரீவோஸ்ட் ஒரு சீர்திருத்தவாதியாகக் காணப்படுகிறார், மேலும் பெருவில் ஒரு மிஷனரியாக பல ஆண்டுகள் பணியாற்றினார், பின்னர் அங்கு பேராயராக (கார்டினல்) நியமிக்கப்பட்டார்.

உலகத் தலைவர்கள் போப் லியோ XIV-ஐ வாழ்த்தி வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு அமெரிக்க போப்பைப் பெற்றிருப்பது பெரிய மரியாதை என்று கூறினார்.

No comments