பிரித்தானியாவில் மக்கள் மீது கார் மோதியது: மருத்துவமனையில் 27 பேர்


பிரித்தானியாவின் பிரீமியர் லீக் கோப்பையை வென்ற லிவர்பூல் கால்பந்து அணி தனது சொந்த இடத்தில் வெற்றிக்கான அணிவகுப்புச் செய்துகொண்டிருந்தபோது, மகிழுந்து ஒன்று மக்கள் மீது மோதியது.

வாட்டர் ஸ்ட்ரீட்டில் பல மக்கள் மீது ஒரு மகிழுந்து மோதியதாக வந்த தகவலைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்குப் பிறகு தங்களுக்கு அழைப்பு வந்ததாக மெர்சிசைடு காவல்துறையினர் தெரிவித்தனர்.

மகிழுந்து மக்கள் கூட்டத்தை இடித்து மோதியதுடன் ஒருவர் தூக்கி எறியப்பட்ட காட்சியும் காணொளியில் பதிவாகியுள்ளது. பின்னர்  மகிழுந்து சம்பவ இடத்தில் நின்றது. கால்பந்து இரசிகர்கள் மகிழுந்தைச் சூழந்தனர். மகிழுந்து ஓட்டுநரான ஆண் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தில் ஒருவர் மீது மகிழுந்து மோதியதாகக் கூறப்படுகிறது. ஓட்டுநரைக் கைது செய்வதற்கு முன்பு அங்கிருந்த மக்கள் மகிழுந்தைச் சூழ்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. எனினும் குறைந்தது நான்கு பேர் காவுதடிகளில் (ஸ்ட்ரெச்சர்களில்) கொண்டு செல்லப்பட்டதாக AFP செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது இன்னும் தெரியவில்லை.

No comments