யாழில். சமைக்கும் போது தீக்காயங்களுக்கு உள்ளான பெண் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் சமையலில் ஈடுபட்டிருந்த வேளை ஆடையில் தீ பற்றியமையால் படுகாயமடைந்த இளம் குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த கஜன் ஜனுயா (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த 20 ஆம் திகதி வீட்டில் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய வேளை அது அவரது ஆடையிலும் தீப்பற்றியது. 

தீக்காயங்களுக்கு உள்ளானவரை சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.


தீக் காயத்தால் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

No comments