திருகோணமலையில் விபத்து: இருவர் படுகாயம்
திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக வீதியின் சந்திக்கு அருகே நகரத்தில் இருந்து வெளியேறிய சிற்றூர்தி, நகரை நோக்கி பயணித்த கொண்ட உந்துருளியும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்திற்கு சற்று முன்னர் கடல்முக வீதியில் இருந்து திருஞானசம்பந்தர் வீதியை அடைந்த இன்னுமொரு உந்துருளி குறித்த உந்துருளியுடன் மோதிய பின்னர் சிற்றூர்தியுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிற்றூர்தி செலுத்தி வந்தவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் உந்துருளியில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment