யாழில் 270 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது


யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டனர்.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சமன் பிரேமதிலகவின் வழிநடத்தலின் கீழ் உப காவல்துறைப் பரிசோதகர் நந்தகுமாரின் தலைமையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 24 வயது மதிக்கத்தக்க மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments