தென்கடலில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு ; 600 கிலோ போதைப்பொருள் மீட்பு - 11 பேர் கைது
இலங்கை கடற்படையினரின் விசேட நடவடிக்கையின் போது ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் 600 கிலோ கிராம் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றினை கடத்தி சென்ற 02 மீன்பிடி படகுகளுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற இரண்டு உள்ளூர் பல நாள் மீன்பிடி படகுகளுடன் குறித்த 11 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த, பல நாள் மீன்பிடி படகுகள் தற்போது திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அவற்றினை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, கடற்படைத் தளபதி மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
Post a Comment