ஆனையிறவு உப்பு கறுப்பு சந்தையிலா?
இலங்கையில் உப்பு விலை என்றுமில்லாதவாறு அதிகாரித்துள்ள நிலையில் ஆனையிறவு உப்பளத்தில் உப்பு பொதியிடுவதற்காக இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரம் உப்பளத்தில் பொருத்தப்பட்டு கடந்த மார்ச் 29ம் திகதி அன்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை, அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.
ஆனால் குறித்த இயந்திரம் கடந்த 10ம் திகதி அன்று இயந்திரத்தின் ஒரு உபகரணம் வெடித்ததன் காரணமாக தற்போது செயற்பாடின்றி காணப்படுகிறது. பத்து நாட்களில் இந்த இயந்திரம் பழுதடைந்தமை தொழிலாளிகள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதியிடல் இயந்திரம் இயங்கிய இந்தக் காலப்பகுதியில் ஆனையிறவில் இருந்து கட்டி உப்பு வெளியிடங்களுக்குச் எடுத்துச் செல்ல முடியாதிருந்தது. ஆனால் இயந்திரம் பழுதடைந்த பின்னர் மீண்டும் வழமை போன்று பாராவூர்த்திகளில் கட்டி உப்பு வெளியே எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த உப்பை தென்னிலங்கையை சேர்ந்த 15 வரையான கொள்வனவாளர்களே.இந்த கொள்வனவாளர்களை உப்பளத்தின் உயரதிகாரியே தீர்மானித்திருக்கிறார் என்கின்றனர் எனவே அந்த கொள்வனவாளர்கள் தினமும் பல மொற்றிக்தொன் உப்பை ஆனையிறவிலிருந்து கொள்வனவு செய்து செல்கின்றனர். இந்த கொள்வனவாளர்கள் மூலம் சிலருக்கு கொமிசன் கிடைக்கிறது எனவும் அதன் காரணமாகவே ஆனையிறவில் உப்பு பொதியிடப்படுவதனை அவர்கள் விரும்பிவில்லை என்பதுமே இங்கு முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டாக காணப்படுகிறது.
குறித்த இயந்திரத்தை இந்தியாவுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கொள்வனவு செய்த குழுவினர் உப்பளத்தின் உயர் பதவியில் இருக்கின்ற ஒருவரின் சசாக்கள் என சொல்லப்படுகிறது. இந்த உப்பளத்தின் தற்போதைய சிக்கலுக்கு அந்த உயரதிகாரியே பிரதான காரணம் எனவும் பலரும் குறிப்பிடுகின்றனர். இந்த இயந்திரம் ஒரு கிலோ மற்றும் 400 கிராம் பொதிகளை பொதியிடக் கூடியது. ஒரு மணித்தியாலயத்தில் 5 தொன் உப்பை பொதியிடும் திறன் கொண்டது.
இ;வ்வாறு அந்த இயந்திரம் உப்பை ஆனையிறவில் பொதியிடுகின்ற போது வெளியில் உப்பை எடுத்துச் செல்வது தடுக்கப்படும், இதனால் உயரதிகாரிகளுக்கு கிடைக்க கூடிய கொமிசன் கிடைக்காமல் போகும் எனவேதான் ஆனையிறவில் உப்பு பொதியிடப்படுவதனை உயர்மட்டம் விரும்பவில்லை. ஆனையிறவு உப்பளத்தை விரிவாக்கவும் விரும்பவில்லை என்பதே இப்போது பலரும் முணுமுணுக்கும் விடயமாகும்.
ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பு கட்டி உப்பாக அம்பாந்தோட்டை, புத்தளம், மன்னார் உப்பளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதியிடப்பட்டு தனியார் கொள்வனவாளர்கள் அவற்றை பெற்றுச்செல்கின்றனர். இவர்கள் ஆனையிறவில் ஒரு கிலோ உப்பை தற்போது 67 ரூபாவுக்கு கொள்வனவு செய்து அதனை இங்கிருந்து அம்பாந்தோட்டைக்கும், புத்தளத்திற்கும், கொண்டு செல்கின்றனர் அங்கு பொதியிடுகின்றனர். பின்னர் அவற்றை அங்கிருருந்து மீளவும் வடக்கு பிரதேசம் உட்பட பல பிரதேசங்களுக்கு விற்பனை செய்கின்றனர். ஏற்றிக்கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவு, பொதியிடல் செலவு, மீளவும் கொண்டுவருவதற்கான செலவு என உற்பத்தி செலவு அதிகரிக்கும் நடவடிக்கையே தற்போது இடம்பெறுகிறது
Post a Comment