புன்னாலைக்கட்டுவானில் மோட்டார் சைக்கிள் விபத்து - முதியவர் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டியான முதியவர் உயிரிழந்துள்ளார் 

புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த கந்தவர்ணம் செல்வநாயகம் (வயது 62)  எனும் முதியவரே உயிரிழந்துள்ளார் 

யாழ்ப்பாணம் நோக்கி பலாலி வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் , எவ்வித எச்சரிக்கை சமிக்சைகளும் இன்றி , இரவு வேளையில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளான நிலையில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் , ஆபத்தான முறையில் வீதியில் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் உழவு இயந்திர சாரதியான 27 வயதான இளைஞனை கைது செய்துள்ளனர் 

No comments