ஆட்களை காணோம்:தூக்கம்?
இலங்கை நாடாளுமன்றில் மாலை அமர்வில் ஒருவரும் இல்லாது போயிருந்த எதிர்கட்சி ஆசனங்களை அம்பலப்படுத்தியுள்ளார் ஊடக செயற்பாட்டாளர் ஒருவர்.
நேரம் மாலை 5.10 மணி.பட்ஜெட் விவாதம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. காலையில் வந்து ஊடகங்களுக்கு குரல் கொடுத்து தங்களை காண்பித்துக்கொண்ட எவரும் மாலையில் இல்லை.பட்ஜெட் விவாதத்திற்கு எதிராக யாரும் இல்லையென்பது பரிதாபம்.
நாட்டின் மிக முக்கியமான அமைச்சுக்களில் ஒன்றான சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகத்தின் பட்ஜெட் விவாதத்தின் போது எதிர்க்கட்சி பங்கேற்பு இன்றி வெறிச்சோடி காணப்பட்டது நாடாளுமன்று.
Post a Comment