ஷேக் ஹசீனாவின் தந்தையின் வீடு போராட்டக்காரர்களால் தீயிட்டு எரிப்பு


பங்களாதேஷின் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஷேக் ஹசீனாவின் பூர்வீக இல்லமும் அவரது கட்சியின் ஏனைய உறுப்பினர்களின் இல்லங்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தரப்பினரால் தீ வைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

பதவி நீக்கப்பட்ட ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அங்கிருந்து சமூக ஊடகங்கள் மூலம் உரையாற்றுவார் என்ற செய்தி வெளியானது.

இதனைத் தொடர்ந்து அவரது வீடு சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகாலமாக பங்களாதேஷில் ஆட்சி புரிந்த ஷேக் ஹசீனா அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பநிலை காரணமாக தமது பதவியைத் துறந்தார்.

பின்னர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருந்த ஷேக் ஹசீனாவின் தந்தையின் இல்லமும் நேற்று உடைக்கப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments