முன்னவர்களை பின்னவர்கள் ஆபத்தானவர்கள்??

 


அனுர தனது வடக்கிற்கான பயணத்தின் மூலம் ஐ.நா மனித உரிமை பேரவையில் எமக்கான உரையாடல் கதவையும் மூடுவதற்கு முயற்சிப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயக அரசியலுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் இறங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தமிழர்களுக்கான கதவினை மூடுவதற்கு எடுக்கும் முயற்சியை தமிழ் தேசிய அரசியல் சமூகமும், சிவில் சமூகமும், பொதுமக்களும் சரியாக உணர்ந்து கொள்ளவேண்டும்.இனியும் கூட்டாக செயல்படா விடின் எம்மை நாமே அழித்துக் கொண்ட வரலாற்று தவறிழைத்த மக்களாவோம்.

கடந்த வருட ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மட்டுமல்ல அன்மையில் நடந்த யாழ் அபிவிருத்திக் குழு கூட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதியின் மக்கள் சந்திப்புகள் குறிப்பாக வல்வெட்டித்துறையில் அவருக்கான வரவேற்பு தேசிய மக்கள் சக்தியை மேலும் பலப்படுத்தியமையாக காட்டப்படுகின்றது.அத்தோடு அது தேசிய மக்கள் சக்தியுடன் மக்கள் ஒன்று படுதல் மட்டுமல்ல பெரும் தேசிய வாதத்துடன் ஒன்று படுவதாகவே தெற்கில் காட்டப்படுகின்றது. அதுவே பேச்சு பொருளாகியுமுள்ளது.

அதனை சாதகமாக்கிக் கொண்டே தற்போதைய அரசின் வெளிநாட்டு அமைச்சர் இம்மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு செல்ல உள்ளார். பேரவையின் கருத்துக்கள், ஆலோசனைகள் என்பவற்றை புறந்தள்ளி ஐ.நா மனித உரிமை பேரவையில் எமக்கான உரையாடல் கதவையும் மூடுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது.

இந்நிலையில் அரசியல் சமூகமாக அடையாளப்படுத்திக் கொண்டிருப்போர் பொது வெளியில் அமைதி காப்பதை விடுத்து முன்னவர்களை விட பின்னவர்கள் ஆபத்தானவர்கள் என்பதை சுட்டிக் காட்டவேண்டும் எனவும் சக்திவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.


No comments