மனைவியுடன் சென்றவரை கடத்தி சென்று படுகொலை செய்த கும்பல்


மனைவியுடன் சென்ற நபர் கடத்தி செல்லப்பட்டு, கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார் 

கொழும்பு மட்டக்குளி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே படுகொலை செய்யப்பட்டுளளார். 

தொலைபேசி அழைப்பொன்று வந்ததை அடுத்து , தனது மனைவியுடன் புளூமெண்டல் புகையிரத நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வந்த நபர்கள் சிலர் அவரை அங்கிருந்து கடத்தி சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் கொட்டாச்சேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments