மாவை மரணம்:சீ.வீ.கே மற்றும் சத்தியலிங்கம்?
மாவை சேனாதிராசாவின் மரணத்திற்கு அவரை இறுதியாக சந்தித்த சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் சத்தியலிங்கம் ஆகிய இருவருமே காரணமென குற்றஞ்சுமத்தியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் .
அவரது மரணத்திற்கு காரணமான தனிப்பட்ட பேச்சு பற்றிய தகவல்களை அவர்கள் வெளிப்படுத்தவும் சிவமோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
வவுனியாவில் நடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் கருத்து வெளியிடுகையில் மாவை தமிழர் அரசியல் பல முரண்களைத் தன்னகத்தே கொண்டதாகத் தெரிந்தாலும் அந்த முரண்களுக்குள்ளும் உடன்பாடு கண்டு பயணிக்கும் அரசியல் நாகரீகமும் அண்ணனிடம் நிறைந்து இருந்தது.அவர்கொண்ட பற்றுறுதி போற்றத்தக்கது.
தமிழரசுக் கட்சியின் பாரம்பரிய மூத்த கடைசித் தலைமை அண்ணன் மாவை அவர்களே.ஒரு மூத்த தமிழர் தலைவரை துரோகத்தால் இழந்துவிட்டோமே என்று மனம் வெதும்புவதைத் தவிர்க்க முடியவில்லை.
நான் பகிரங்க சவால் விடுகின்றேன்.முடிந்தால் மாவை சேனாதிராசாவின் மரணத்திற்கு அவரை இறுதியாக சந்தித்த சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் சத்தியலிங்கம் ஆகிய இருவரும் கதைத்தமை தொடர்பில் வெளிப்படுத்தட்டுமென தெரிவித்தார்.
Post a Comment