முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமானார்


மூத்த அரசியல்வாதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஆர்.பி.சூரியப்பெரும 96 ஆவது வயதில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (02) காலமானார்.

ஜே.ஆர்.பி.சூரியப்பெரும 2010 - 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். 

அத்தோடு அக்கட்சியின் கேகாலை மாவட்ட டெடிகம தேர்தல் தொகுதியின் சிரேஷ்ட அமைப்பாளராகவும் அவர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments