யேர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல்: 5 பேர் பலி! 200 பேர் காயம்!
யேர்மனியின் கிழக்குப் பகுதியில் உள்ள மாக்டேபர்க் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் நேற்றிரவு வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் வாடகைக் காரில் வந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதி காரை ஓட்டியதால் . 5 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 200 பேர் காயமடைந்தனர். இதில் 86 பேர் மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 50 வயதான சவூதி நாட்டவர் என்றும் அவர் மருத்துவராக பணிபுரிந்தவர் என்றும் 2006 ஆம் ஆண்டு முதல் யேர்மனியில் வசிப்பவர் என்றும் மாநில பிரதமர் ரெய்னர் ஹசெலோஃப் தெரிவித்தார்.
தனியாக செயல்பட்டதாக நம்பப்படும் சந்தேக நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.
குற்றத்தின் பின்னணியில் உள்ள சாத்தியமான நோக்கங்கள் குறித்து அதிகாரிகள் இன்னும் அறிக்கையை வழங்கவில்லை.


Post a Comment