நியூசிலாந்து ஆக்லாண்ட் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள்
நியூசிலாந்து நேரம் மாலை 6.30 மணியளவில் மாவீரர் நாள் நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி
ஏற்றப்பட்டது.அதனைத்த தொடர்ந்து மணிஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தி முதன்மைச்சுடர் ஏற்றியவுடன், தமிழீழக் கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தங்களின் உயிர்களை ஆகுதியாக்கிய எம் தேசப் புதல்வர்களின் கல்லறைக்கு மாவீரர் குடும்ப உறவுகள் சுடரேற்றியவுடன் மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.
தொடந்து மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
மாவீரர் கானம் இசைக்க மாவீரர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களால் மலர் வணக்கம் செலுத்தி, ஈகைச்சுடரேற்றப்பட்டது.
அனைத்து நிகழ்வுகளும் மாவீரர்களின் தியாகத்தையும், அவர்களின் வீரச் செயல்களையும் உணர்த்தியதுடன் மக்களுக்கு எழுச்சியையும் ஊட்டியதாக அமைந்தன.
தேசியத்தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்து, அனைவரும் முன்னின்று மாவீரர் நாள் நிகழ்வுகளை மிகவும் உணர்புபூர்வமாக நடத்தியிருந்தார்கள்.
மாவீரர்களின் தியாகம் வார்த்தைகளால் சொல்லமுடியாதவை, அவர்களின் தியாகத்தை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லவேண்டிய கடமை அனைவரின் கைகளி்லும் உள்ளது. அத்துடன் தமிழீழம் என்ற இலக்கை அடையும் வரை அயராது செயற்பட வேண்டுமென, இன்றைய நாளின் செயல்பாடுகளின் ஊடாக அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டது.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது தேசியக்கொடி கையேந்தப்பட்டு,
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற எமது தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது
Post a Comment