இம்ரான் கானின் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத் தடுப்புகளை உடைத்துச் சென்றனர்


சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செவ்வாய்க்கிழமையன்று காவல்துறையின் தடையை மீறிச் சென்றனர்.

இஸ்லாமாபாத் நகரமே கடந்த சனிக்கிழமை பிற்பகுதியில் இருந்து பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. மேலும் 20,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நகரத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இம்ரான் கான் தனது விடுதலை மற்றும் தற்போதைய அரசாங்கம் பதவி விலகக் கோரி பாகிஸ்தான் நாடாளுமன்றம் அருகே பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இம்ரான் கான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் ஆதரவாளர்களின் பேரணி வடமேற்கு கைபர்-பக்துன்க்வா மாகாணம் மற்றும் பஞ்சாபின் கிழக்கு மாகாணத்தில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கிப் பயணித்துள்ளனர். 

No comments