கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு சிறுவன் படுகொலை
கொழும்பில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு சிறுவன் ஒருவன் படுகொலை செய்யப்பட்டுள்ளான்.
கிராண்ட்பாஸ் பொலிஸார் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்த பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவேனே உயிரிழந்துள்ளான்.
இரு தரப்பினருக்கு இடையே நிலவிய முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 31, 32 மற்றும் 36 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment