யாழ் - கண்டி நெடுஞ்சாலை ஓமந்தையில் வெள்ளத்தில் மூழ்கியது - போக்குவரத்து தடை


யாழ்ப்பாணம் செல்லும் A9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதற்கமைய கெப்பத்திக்கொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன், மன்னார் ஊடாக யாழ்ப்பாணம் செல்ல முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments