சட்டம் சங்குப்பிட்டி பாலத்தில் வளையும்!



மன்னார் யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள சங்குப்பட்டி பாலம் கனரக வாகனம் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் மறு அறிவித்தல் வரை கனரக வாகன சாரதிகள் பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் செல்லுமாறு கேட்டுகொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பேருந்துகள் பயணிகள் இறக்கி நடக்க விடப்பட்டு வெறும் பேருந்துகளாக அனுமதிக்கப்படும் என பிரச்சாரப்படுத்தப்படுகின்ற நிலையில் கள்ளமண் ரிப்பர்களிற்கோ அவ்வாறான எந்தவொரு கட்டுப்பாடும் இல்லையென்கின்றனர் பொதுமக்கள்.

இன்று மாலையும் பெருமளவிலான மணல் ஏற்றிய ரிப்பர்கள் சங்குப்பிடடி பாலத்தை கடந்துள்ளதை மக்கள் கண்டுள்ளனர்.

இதேவேளை ஏ-9 வீதியெனில் கிளிநொச்சி பளை,கொடிகாமம் மற்றும் சாவகச்சேரியென காவல்துறையை கவனிக்கவேண்டும்.

எனினும் சங்குப்பிட்டி பாலமெனில் சாவகச்சேரி மட்டுமே கவனிக்கவேண்டுமென்கின்றன தொடர்புடைய தரப்புக்கள்  


No comments