ஜோன்ஸ்டன் பெர்னாண்டோக்கு சுகயீனம் ?





எந்நேரமும் கைதாகலாமென்ற அச்சத்திலுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தமக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதால் வாக்குமூலம் வழங்குவதற்காக வேறொரு நாளில் வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட் செய்யப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலத்தை பெறுவதற்காகவே அவர் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அதற்கு வேறு திகதியை வழங்குமாறு அவர் தனது சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாட்டு பயணத்தடையை நீதிமன்றம் விதித்துள்ளது.

No comments