அனுர குத்துக்கரணமடிக்கிறார்:சுமந்திரன்!
மாற்றமொன்றை கொண்டுவரப்போவதாக தெரிவித்து ஜனாதிபதி கதிரையில் ஏறிய அனுர தற்போது குத்துக்கரணம் அடிக்க தொடங்கிவிட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிடுகையில்
தமிழ் மக்கள் வாழ்க்கையில் அரசியலில் 75 வருடங்களுக்கு மேலாக நாங்கள் மாற்றத்தை தேடுகிறோம். அதற்காக பல வழிகளில் போராடி, பல உயிர்களை இழந்துள்ளோம்.
எங்களுடைய மக்கள் 75 வருட காலமாக நியாயமான அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ் மக்கள் விரும்பிய அரசியல் மாற்றத்திற்கு தெற்கு மக்கள் பங்கு தாரர்களாக வரவில்லை.
தற்போது மாற்றம் என கூறி ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியினரின்,தேர்தல் கால வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக சறுக்க தொடங்கி விட்டது.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குவது என்ற கோரிக்கையை ஜே.வி.பி யினரும் இணைந்து முன் வைத்தனர். பயங்கரவாத தடுப்பு சட்டம் முற்றாக நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள் தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க தேவையில்லை. அதனை துஸ்பிரயோகம் செய்யாது இருந்தால் போதும் என சொல்கின்றனர்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல தான் ஜேவிபி யினரும் பாதிக்கப்பட்டனர். அதனால் அதனை நீக்க வேண்டும் என முதலில் கூறியவர்கள் தற்போது அதனை துஸ்பிரயோகம் செய்யாது இருந்தால் போதும் என்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் முடிவின் வரைபடத்தில் கோட்டா பாய ராஜபக்சேவிற்கும் அநுர குமார திசாநாயக்கவிற்கும் கிடைத்த வாக்குகளில் பெரிய வித்தியாசம் இல்லை. என்பது தெளிவாக தெரியும். அதாவது சிங்கவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை தவிர ஏனைய பகுதியில் அநுராவிற்கு வாக்குகள் கிடைக்கவில்லை.
வடக்கு கிழக்கு மக்கள் 75 வருட காலமாக ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளனர். அதிகாரங்கள் சரியாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என நிலைப்பாட்டில் உள்ளனர என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்;.
Post a Comment