யப்பானில் 2ஆம் உலகப்போர் குண்டு வெடித்தது: விமான நிலையம் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டது!


யப்பானில் இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத வெடிகுண்டு வெடித்ததால், 80 வரையான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

இச்சம்பவம் தெற்கு ஜப்பானின் மியாசாகி விமான நிலையம் நேற்றுப் புதன்கிழமை நடந்தது. இன்று வியாழக்கிழமை அனைத்து விமான சேவைகளும்  மீண்டும் திறக்கப்பட்டன.

ஒரு விமானம் அந்த இடத்தைக் கடந்து ஓடுபாதையை நோக்கிச் சென்ற ஒரு நிமிடத்தில், குண்டுவெடிப்பு ஏற்பட்டது. குண்டு வெடிப்பில் டாக்ஸிவேயில் ஒரு பெரிய பள்ளத்தை ஏற்படுத்தியது.

புதன்கிழமை சுமார் 80 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 3,400 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்க முடியாது பாதிப்படைந்தனர். ஆனால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

டாக்ஸிவேயில் உள்ள துளை சுமார் 7 மீட்டர்  விட்டம் மற்றும் 1 மீட்டர் ஆழம் கொண்ட கிடங்கு ஏற்பட்டது. 

விமான நிலைய சேதம் இரவோடு இரவாக சரி செய்யப்பட்டு, வியாழக்கிழமை காலை விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன.

ஜப்பானின் தற்காப்புப் படையின் வெடிகுண்டு செயலிழப்புக் குழு அந்த இடத்தை ஆய்வு செய்தன. 

இரண்டாவம் உலகப் போரின்போது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வீசப்பட்ட 250 கிலோகிராம் (550-பவுண்டு) வெடிகுண்டினால் இந்த வெடிப்பு ஏற்பட்டது என்று ஆய்வில் முடிவு செய்யப்பட்டது.

No comments