நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 104 பேர் உயிரிழப்பு!
நேபாளத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 104 ஆக உயர்ந்ததுள்ளது. மேலும் பலரைக் காணவில்லை.
இமயமலை நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் இருந்து அறிக்கைகள் வருவதால், எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த வியாழன் பிற்பகுதியில் பெய்த மழை , நாட்டின் பெரும்பகுதியை, குறிப்பாக கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் தாக்கியுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை வானிலை நிலைமைகள் மேம்பட்டன. இதனால் மீட்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் முயற்சிகளை தொடர காலநிலை அனுமதித்துள்ளது.
Post a Comment