நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் என அறிவிப்பு!


இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானியில் கையெழுத்து  இட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான திகதி உறுதி செய்யப்பட்டது.

இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைப்பதற்கு அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டி 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10வது பிரிவை அனுரகுமார திஸாநாயக்க பயன்படுத்தியுள்ளார்.

இதனை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி அதிகாரத்தின் 70வது சரத்தை  அனுரகுமார திஸாநாயக்க பயன்படுத்தியுள்ளார்.

இதன் அடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டதும் நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு நவம்பர் 21 ஆம் நாள் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை அடுத்த மாதம் அக்டோபர் 4 திகதி முதல் அக்டோபர் 11 மதியம் வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments