எரிபொருட் டேங்கர் பாரவூர்தி விபத்து: 48 பேர் பலி! 50 மாடுகளும் பலி!
நைஜீரியாவில் நைஜர் மாநிலத்தில் அகாயி பகுதியில் எரிபொருள் டேங்கரும் டிரக் ஒன்றும் வீதியில் மோதியதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து கருகின. மீட்கப்பட்ட உடலங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகே அவர்கள் அனைவரும் புதைக்கப்பட்டனர்.
டிரக்கில் ஏற்றிவரப்பட்ட மாடுகளில் 50 வரையில் எரிந்து கருகின.
நைஜீரியாவில் கடுமையான சாலை விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன.
2020ல் மட்டும் 1,531 பெட்ரோல் டேங்கர் விபத்துக்கள் ஏற்பட்டதாக நைஜீரியாவின் ஃபெடரல் ரோடு சேஃப்டி கார்ப்ஸை மேற்கோள் காட்டி ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment