கீவ் மீது 5 மணி நேர வான்வழித் தாக்குதலைகள்! மின்கட்டமைப்புக்கள் சேதம்!!


உக்ரைனில் தலைநகர் கீவி மீது ஒரே இரவில் 5 மணி நேர  வான்வழித் தாக்குதலைளை ரஷ்யா நடத்தியுள்ளது. இதனால் உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகள் கீவைப் பாதுகாக்கப்ப போராடியதாக உக்ரைன் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை கூறினர்.

இரவு நடத்தப்பட்ட தாக்குதல்கள் கீவ்வில் அமைந்துள்ள மின் கட்டமைப்புக்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கப்பட்டன.

கீவ் தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் அவசர சேவை தெரிவித்துள்ளது. 

நகரில் ஒரு மழலையர் பள்ளி, எரிவாயு குழாய் மற்றும் சுமார் 20 கார்கள் சேதமடைந்துள்ளதாக கிய்வ் இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் ஆற்றல் உற்பத்தித் திறனில் சுமார் 70% மின்சார வலையமைப்பின் மீதான தாக்குதல்கள் நடத்பட்டன. இதனால் எதிர்வரும் குளிர்காலத்தில் உக்ரைனில் மின்தடை ஏற்படுகிறது.

No comments