பாரவூர்தியில் மறைந்திருந்த 30 புலம்பெயர்ந்தவர்கள் கண்டுபிடிப்பு


செக்குடியரசுக்கும் யேர்மனிக்கும் இடையேயான டிரெஸ்டன் நகருக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலையில் பாரவூர்தி ஒன்றில் 30 புலம்பெயர்ந்தவர்ளைக் செக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

நேற்று திங்கட்கிழமை இரவு ப்ராக் மற்றும் கிழக்கு ஜேர்மனியின் டிரெஸ்டன் நகருக்கு இடையே உள்ள நெடுஞ்சாலையில் பாரவூர்தி நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதன்போது அந்த வாகனத்தில் 30 பேர் இருந்தமை தெரிவந்தது. இவர்கள் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள் என்றும் இவர்கள் அனைவரும் யேர்மனி உட்பட ஏனைய ஐரோப்பிய செல்வந்த நாடுகளுக்குச் செல்லவிருந்ததாகத் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் செக் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 30 வயதுடைய பெண் ஒருவர் சுயநினைவின்றி இருந்ததால் அவருக்கு சிகிற்சை அளிக்கப்பட்டது. பின்னர் குறித்த பெண் இறந்துவிட்டதாக அவசர சேவை கூறியது.

ஏனையவர்களும் மோசமான உடல்நிலையில் மீட்கப்பட்டனர். ஆனாலும் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டிய அவசியம் இருக்கவில்லை என்று அவசரசேவை மேலும் தகவல் வெளியிட்டது.

No comments