மொசாட் தலைமையகம் மீது தாக்குதல் என்கிறது ஹிஸ்புல்லா: இல்லை இடைமறித்துவிட்டோம் என்கிறது இஸ்ரேல்!
இஸ்ரேலிய தலைநகர் டெல்அவியில் உள்ள இஸ்ரேலின் புலனாய்வு பிரிவான மொசாட் அமைப்பின் தலைமையகத்தினை நோக்கி ஹிஸ்புல்லா அமைப்பு செலுத்திய ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
டெல்அவியில் நோக்கிய தாக்குதல் இலக்கை சரியாகத் தாக்கியதாக ஹிஸ்புல்லா கூறியது.
லெபனானில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து ஏவுகணையை வீசியபோது, ஹிஸ்புல்லாவின் இலக்கு என்ன என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் நதவ் ஷோஷானி கூறினார்.
இதன் விளைவாக டெல் அவிவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி ஒரு கனரக ஏவுகணை பறந்து சென்றது. மொசாட் தலைமையகம் அந்த பகுதியில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் பொருளாதார தலைநகரான டெல் அவிவில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. நெதன்யா நகரம் உட்பட மத்திய இஸ்ரேலின் பிற பகுதிகளிலும் சைரன்கள் ஒலித்தன.
ஆனால் சேதம் அல்லது உயிரிழப்பு பற்றிய தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பொதுவாகவே இஸ்ரேலுக்குள் நடக்கும் உயிரிழப்பு சேதவிபரங்களை இஸ்ரேல் வெளியிடுவதில்லை. அதேபோல் மேற்கு ஊடகங்களும் இஸ்ரேல் மீதான தாக்குதல் செய்திகளை இருட்டடிப்புச் செய்வது வழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment