பசிபிக் பெருங்கடலில் ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தியது சீனா
பசிபிக் பெருங்கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) வெற்றிகரமாகச் சோதனை செய்ததாக சீனா கூறியது. இது பிராந்தியத்தில் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தினரால் இன்று புதன்கிழமை பெய்ஜிங் நேரப்படி காலை 8.44 மணிக்கு ஏவப்பட்டது என சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை கடலில் நிறுத்தி வைக்கப்பட்ட இலக்கை தாக்கி அழித்தது. இது ஒரு வருடாந்த பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதி எனக் கூறியது பாதுகாப்பு அமைச்சகம்.
அத்துடன் இது எந்த நாட்டையோ அல்லது ஒரு இலக்கையோ நோக்கியதாக இல்லை என சீன பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியது.
Post a Comment