சண்டையிடத் தயாராகவே உள்ளோம் - ஹிஸ்புல்லாவின் துணைத் தலைவர்


ஹிஸ்புல்லாவின் துணைத் தலைவர், லெபனான் ஆயுதக் குழு அதன் தலைவர் மற்றும் பல மூத்த தளபதிகள் கொல்லப்பட்ட போதிலும், இஸ்ரேலிய

தரைவழித் தாக்குதலைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

ஹிஸ்புல்லாவின் இராணுவத் திறன்களை இஸ்ரேல் தாக்கவில்லை என்று ஷேக் நைம் காசிம் இன்று திங்கட்கிழமை ஒரு பொது உரையில் தெரிவித்தார்.

அண்மைய நாட்களில் லெபனான் மீதான ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேன் குண்டுவீச்சின் போது ஏற்பட்ட பின்னடைவுகள் இருந்தபோதிலும் ஹிஸ்புல்லா தொடர்ந்து போராடும் என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதில் இருந்து ஹிஸ்புல்லாவின் நடவடிக்கைகள் அதே வேகத்தில் தொடர்ந்தன  என்று காசிம் வலியுறுத்தினார்.

மேலும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு புதிய தலைமையை நிர்வாகசபை நியமிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் எந்தவொரு விரிவான தகவல்களையும் தெரிவிக்கவில்லை.

நாங்கள் மிகவும் தயாராக இருக்கிறோம். இஸ்ரேலியர்கள் தரைவழி ஊடுருவலை விரும்பினால் எங்களது படைகள் எதிரிகளாக இஸ்ரேல் படைகளுடன்  மோதத் தயாராக உள்ளன என்று காசிம் அறிவித்தார்.

மேலும் அவர் அனைத்து லெபனான் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தின் புதிய தலைவராக 64 வயதுடைய ஹஷேம் சஃபிதீன்  பதவியேற்கலாம் என நம்பப்படுகிறது.

இவர்  ஹசன் உறவினராவார். அத்துடன் ஹமாஸ் அமைப்பில் ஹசன் நஸ்ரல்லாவுடன் 32 ஆண்டுகள் பயணித்துள்ளார்.

நஸ்ரல்லாவைப் போலவே இருக்கும் சஃபிதீன் ஹெஸ்புல்லா இயக்கத்தில் ஆரம்பம் முதலே இணைந்து செயற்பட்டு வந்துள்ளார்.

நஜாஃப், ஈராக் மற்றும் ஈரானின் கும் ஆகிய இடங்களில் உள்ள இறையியல் மையங்களில் பயின்றார்.

1990ஆம் ஆண்டு மீண்டும் லெபனானுக்கு அழைக்கப்பட்ட போது நஸ்ரல்லாவின் வாரிசாக நியமிக்கப்பட்டார்.

இதேவேளை ஹெஸ்புல்லா இயக்கத்தின் நிர்வாக சபையின் தலைவராகவும் சஃபிதீன் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹாஷிம் சஃபி அல் தின் என்றும் அழைக்கப்படும் ஹஷேம் சஃபிதீன் தெற்கு லெபனானின் டெய்ர் கானூன் என் நஹ்ரில் 1964 இல் பிறந்தார்.

அவர் ஒரு செல்வாக்கு மிக்க லெபனான் ஷியா மதகுருவாகவும், ஹெஸ்பொல்லாவில் உள்ள மூத்த தலைவராகவும் கருதப்படுகிறார்.

அவர் அமைப்பிற்குள் இரண்டாம் கட்ட தலைவராக பரவலாகக் கருதப்படுகிறார்.

அவரது சகோதரர் அப்துல்லாஹ் சஃபி அல் டின் ஈரானில் ஹிஸ்புல்லா பிரதிநிதியாக உள்ளார்.

1980 களின் முற்பகுதியில் ஹிஸ்புல்லா அமைக்கப்பட்ட உடனேயே சஃபிதீனும் சேர்ந்தார்.

நபிகள் நாயகத்தின் நேரடி வழித்தோன்றலைக் குறிக்கும் நஸ்ரல்லாஹ் செய்ததைப் போல அவரும் கருப்பு தலைப்பாகை அணிந்துள்ளார்.

அவர் ஏற்கனவே ஹிஸ்புல்லாவின் ஜிஹாத் சபையின் தலைவராகவும் அதன் ஷூரா சபையின் உயர்மட்ட உறுப்பினர்களில் ஒருவராகவும் உள்ளார்.

1992 ஆம் ஆண்டு முதல் ஹெஸ்பொல்லாவின் முடிவெடுக்கும் அமைப்பின் தலைவராகவும் சஃபிதீன் பணியாற்றியுள்ளார்.

அவரது போர்க்குணமிக்க கருத்துக்களுக்கு பெயர் பெற்ற அவர், குழுவின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பாக உள்ளார்.

2017ல் அமெரிக்கா சஃபிதீனை பயங்கரவாதியாக அறிவித்தது. சவுதி அரேபியாவும் அவரை பயங்கரவாதியாக வகைப்படுத்தியது.

அவர் எப்போதுமே அமெரிக்க கொள்கையை கடுமையாக விமர்சிப்பவராக இருந்து வருகிறார்.


No comments