உக்ரைனில் திடீரென வெளிவிவகார அமைச்சர் உட்பட பலர் பதவி விலகினர்
உக்ரைன் அமைச்சரவையின் பரந்த அளவிலான மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது
நேற்று செய்வாய்க்கிழமை மட்டும் முக்கிய பொறுப்புக்களில் பலர் தங்கள் பதவிகளில் இருந்து பதவி விலகியுள்ளனர்.
ராஜினாமா செய்த அமைச்சர்களில் மிகவும் மூத்தவரான திரு குலேபா கடந்த மார்ச் 2020 ஆண்டு முதல் வெளியுறவு அமைச்சராக இருந்து வருகிறார்.
மூலோபாய தொழில்துறை அமைச்சர் அலெக்சாண்டர் கமிஷின், நீதி அமைச்சர் டெனிஸ் மாலியுஸ்கா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்லான் ஸ்ட்ரைலெட்ஸ், துணை பிரதமர்கள் ஓல்ஹா ஸ்டெபானிஷினா மற்றும் இரினா வெரேஷ்சுக் மற்றும் உக்ரைனின் மாநில சொத்து நிதியத்தின் தலைவர் விட்டலி கோவல் ஆகியோர் அடங்குவர்.
உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, உடனடியான பெரிய அரசாங்க மறுசீரமைப்பிற்கு மத்தியில் பதவி விலகும் கோரிக்கையை முன்வைத்துள்ளார் என உக்ரைன் பாராளுமன்ற சபாநாயகர் ருஸ்லான் ஸ்டெபான்சுக் (Stefanchuk ) புதன்கிழமை தெரிவித்தார்.
பதவி விலகல் கோரிக்கை சட்டமியற்றுபவர்களால் விவாதிக்கப்படும் என்று ருஸ்லான் ஸ்டெபான்சுக் கூறினார்.
உக்ரைன் ஜனாதிபதி அரசாங்கத்தை வலுப்படுத்தவும், உக்ரைனுக்கு தேவையான முடிவுகளை அடையவும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
மேலும் நான்கு கேபினட் அமைச்சர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் தங்கள் ராஜினாமா கடிதங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Post a Comment