வடை போச்சே:ஆய்வாளர்கள் கதிரைக்கனவு பிசுபிசுத்தது
பொதுக்கட்டமைப்பினைப்பயன்படுத்தி நாடாளுமன்ற தேர்தலில் கதிரை பிடிக்கும் பலரது முயற்சிகள் சிவில் தரப்புக்களது எதிர்ப்பினால் பிசுபிசுத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை ஈடுபடாதென்ற தீர்மானம் இன்று செப்டம்பர் 29 ஆம் தேதி, திருகோணமலை உப்பு வெளி,ஆயர் இல்ல மண்டபத்தில், நடந்த பொதுச் சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ்த் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கி, பொது வேட்பாளரை களம் இறக்கின. ஆனால் அதுபோல நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாக தேர்தலில் ஈடுபடுவதில்லை என்று பொதுச்சபை முடிவு எடுத்துள்ளது.
மேலும் பொதுச் சின்னம் ஆகிய சங்கு சின்னத்தை இத்தேர்தலில் பயன் படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுக் கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளிடம் கேட்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment