தீர்மானம் கூட்டு தீர்மானமே:சத்தியலிங்கம்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதான தீர்மானம் தமிழரசுக் கட்சியின்
மத்திய குழுத் தீர்மானம் கூட்டு தீர்மானமேயென மாவைக்கு கட்சியின் செயலாளர் சத்தியலிங்கம் பதிலளித்துள்ளார்.முன்னதாக இன்றைய வவுனியா கூட்டம் கட்சி யாப்புக்கு முரணாக நடந்த கூட்டமென ஒரு தரப்பு வாதிட்டுவருகின்றது.
இன்று முதலாம் திகதி தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில் நடைபெறும் என்று 28 ம் திகதியிடப்பட்ட கடிதம் 29 ஆம் திகதி அன்று அனைத்து மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் கிடைக்கப்பெற்றது. கட்சியின் யாப்பின் படி மத்தியகுழு கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன் எழுத்துமூல அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது யாப்பு விதி.
1) யாப்பு விதியை மீறி நடாத்தப்பட்ட கூட்டம் செல்லுபடியற்றது. அதுமட்டுமின்றி அங்கு எடுத்த தீர்மானமும் செல்லுபடியற்றது.
2) 26 ஆம் திகதி கட்சி தலைவர் மாவை ஐயாவை சந்தித்த சிறீதரன் எம்பி “நான் 29 ஆம் திகதி இங்கிலாந்து செல்கிறேன், 6ஆம் திகதி தான் திரும்ப வருவேன். அதற்கிடையில் முக்கிய கூட்டங்களை தவிர்க்குமாறு” கேட்டிருந்தார்.
3) சிறீதரன் எம்பியின் கோரிக்கையை ஏற்ற மாவை ஐயா 8ஆம் திகதியில் இருந்து 10ஆம் திகதிக்கிடையில் தான் கூட்டம் போடுவம் சிறீ என்று உறுதியளித்திருந்தார்.
இன்று நடந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரன் சார்ள்ஸ், யோகேஸ்வரன், சிறீநேசன், சரவணபவன், ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா போன்ற முக்கிய தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்குபற்றவில்லை.
46 மத்திய குழு உறுப்பினர்களில் 25 பேர் தான் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அதில் 6 பேர் தமிழ் பொது வேட்பாளருக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். ஆக சுமந்திரன் அணியின் 19 பேர் எடுத்த தனித்தீர்மானம் தான் சஜித்தை ஆதரவளிப்பது என்பது.
மட்டக்களப்பை சேர்ந்த சிறீநேசன், யோகேஸ்வரன் ஆகியோருக்கு இன்றைய கூட்டம் தொடர்பில் இதுவரை எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை.
இந்த நிலையில் தான் பலமான தரப்பை உள்ளீர்க்காமல் சுமந்திரன் அணியால் திட்டமிட்டு தனித்து சஜித்திற்கு ஆதரவு என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த முடிவு தமிழரசுக்கட்சியின் முடிவு இல்லை என்பதை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதான தீர்மானம் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுத் தீர்மானம் கூட்டு தீர்மானமேயென மாவைக்கு கட்சியின் செயலாளர் சத்தியலிங்கம் பதிலளித்துள்ளார்.

Post a Comment