முறுகும் சஜித் பங்காளிகள்:நாமல் அழைப்பு!
ரணிலிருந்து விலகும் கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய முற்பட்டுள்ள நிலையில் பங்காளிகள் சண்டை உச்சமடைந்துள்ளது.உள்ளக மாற்றங்கள் நிறைவடைந்ததன் பின்னர், பொதுத் தேர்தல் தொடர்பில் கூட்டணியாக கலந்துரையாட தயாராகவுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தோண்டமானின் தொழிலாளர் காங்கிரஸ் தற்போது சஜித் தரப்புடன் கூட்டு சேர ஆர்வம் கொண்டுள்ளமை மனோ கணேசன் தரப்பிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக மாற்றங்களை செய்துகொண்டதன் பின்னர் கூட்டணியாக கலந்துரையாட முடியும். நாங்கள் தனிக் கட்சி. எங்கிருந்தாலும் நாங்கள் நிலைத்திருப்போம். இன்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். தொடர்ந்தும் அங்கம் வகிக்கும் விருப்பத்துடனேயே இருக்கிறோம். அதற்கான அடிப்படையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் .
மறுபுறம் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளை மீண்டும் பெரமுனவில் இணையுமாறு அதன் தேசிய அமைப்பாளர் நாமல் அழைப்பு விடுத்துள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்காக கட்சியை மறுசீரமைத்து, திறமையான இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளாh
Post a Comment