ஊழலற்றவர்களிற்கே ஆசனம்?

ஊழலற்ற இலங்கை தெற்கில் பேசுபொருளாகியுள்ள நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள வேட்பாளர்களை தவிர்க்க கட்சிகள்

முற்பட்டுள்ளன.

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில், மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான எவருக்கும் தனது கட்சி வேட்புமனு வழங்குவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

மேலும்,அரசாங்கத்திடம் இருந்து மதுபான உரிமம் அல்லது சலுகைகளை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் எதிராக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு ஐக்கிய மக்கள்  சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச,  கட்சியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டாரவை அறிவுறுத்தியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்  எவருக்கும் வேட்புமனு வழங்கப்படமாட்டாது.

முன்னாள் ஜனாதிபதி ரணிலிடம்  மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் எம்பிக்கள் மூவருக்கு வேட்புமனு வழங்குவதில்லை என  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் ஏற்கனவே தீர்மானித்துள்ளார்

No comments