சம்பள அதிகாரிப்பு சாத்தியமில்லை:நிதி அமைச்சு
இலங்கையிலுள்ள முப்படையினரின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அறிவிப்பிற்கு நிதி அமைச்சு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது.எனினும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படையினரின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் வாக்குறுதி தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன இன்று (4) கருத்து தெரிவிக்கும்போது அறிவிப்பு சாத்தியமற்றதென தெரிவித்திருந்தார்.
இதனிடையே பொதுச் சேவைகளின் சம்பள அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்புகள் தபால் மூல வாக்களிப்பு செயன்முறையை பாதிக்காது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பொதுச் சேவைகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு தொடர்பாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரால் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
அரச நிதி தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பான தற்போதைய முன்மொழிவுகள் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை
சம்பளத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற வேண்டும்” என தேர்தல்கள் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரச சேவைகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி நிபுணர் குழுவின் இறுதி அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது.
சுயாதீன வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவே பிரேரணைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அறிவிப்பு தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என பல்வேறு தரப்பினரும் வாதிட்டு வருகின்றனர்.
Post a Comment