சந்திரகுமாரின் சரக்கு கடைக்கு சி.வி சிபார்சு!



மதுபானச்சாலைக்கான அனுமதிக்கான சிபார்சு கடிதத்தையே தான் வழங்கியதாக தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன்.

வடகிழக்கை மையப்படுத்தி நூற்றுக்கணக்கில் மதுபான சாலைகளை தெற்கு அனுமதித்துள்ளது.

இந்நிலையில் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை உடனடியாக இட மாற்றக் கோரி நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி மதுபானசாலைக்கு முன்பாக  இன்று திங்கட்கிழமை(30) சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் மாவட்ட செயலரிடம்  கையளிக்கப்பட்டதுடன் அவரது வாக்குறுதிக்கமைய மக்கள் ஆர்ப்பாட்டத்தை கை விட்டுள்ளனர்.

இதனிடையே கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் புதிய மதுபானச்சாலைக்கான உரிமம் ஒன்று வடக்கு மாகாண முன்னாள்  முதலமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஊடாகப் பெற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சி.வி.விக்னேஸ்வரன் கடந்த பெப்ரவரி 19 அன்று எழுத்து மூலம் வழங்கிய கடிதத்தின் அடிப்படையிலேயே மதுபான சாலைக்கான அனுமதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

தனுசா நடராசா என்னும் பெயரில் மதுபானசாலைக்கான அனுமதியை சி.வி.விக்னேஸ்வரன் பரிந்துரைத்துள்ளார்.

தனுசா முதலில் ஓர்  இரணுவத்தில் பணியாற்றிய இராணுவ சிப்பாயை திருமணம் செய்திருந்த நிலையில் பின்னார் இராணுவ சிப்பாயை விவாகரத்து செய்துள்ளார். தற்பொழுது சமத்துவ கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய முருகேசு சந்திரகுமாருடன் வாழ்ந்து வருகின்றார்

அதேவேளை தனுசாவிற்கு சொந்தாமாக சுன்னாகம் இணுவில் மற்றும் கனகபுரம் பகுதிகளில் மதுபானச்சாலைகள் உள்ளதாக கூறப்படுகின்றது.


No comments