சி.வி பின்வாங்கினார்: வி.மணிவண்ணனிற்கு முன்னுரிமை!

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில்

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென அறிவித்துள்ளார்.

அத்துடன் தமது கட்சியின் முதன்மை வேட்பாளராக முன்னாள் யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனை அவர் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதியன்று நாடாளுமன்ற தேர்தல் நடாத்தப்படவுள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சியினரிடையே நடைபெற்ற கூட்டத்தில் சி.வி.விக்னேஸ்வரன் தனது முடிவை தெரிவித்துள்ளார்.

2011 செப்டம்பரில் நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு 1,32,255 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதலாவது வட மாகாண சபையின் முதலமைச்சராக சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அரசியலில் பிரவேசித்து வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவான சி.வி.விக்னேஸ்வரன், 2019 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்கு தெரிவாகியிருந்தார்.

அதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறிய வி.மணிவண்ணன் தற்போது தமிழ் மக்கள் கூட்டணியினில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments