சஜித்திற்கு இடமில்லை: திறப்புடன் ஓடினார் அங்கயன்!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை வேட்பாளரிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பிலான தமிழ் தரப்புக்களது உள் வீட்டு அரசியல்

அம்பலமாகிவருகின்றது.

ஏற்கனவே தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ரணிலின் அரசில் நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்த விடயம் பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் மாவை சேனாதிராசா தனது சம்பந்தி சசிகலா ரவிராஜ் சகிதம் ரணில்,சஜித் பொதுவேட்பாளரென அல்லாடிவருகின்றார்.

இந்நிலையில் ரணில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமனாதனின் கட்டை பஞ்சாயத்து சண்டித்தன அரசியலுக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என தமிழரசு ஆதரவாளர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அங்கஜன் இராமனாதனின் ஏற்பாட்டில் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டம் கரணவாய் பகுதியிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது.

நாளைய தினம்  அதே மைதானத்தில் சஜித் பிரேமதாஷாவை ஆதரித்து அங்கஜனின் சித்தப்பாவும் தொலைக்காட்சி உரிமையாளருமான ராஜனினால் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அதனை அங்கஜன் தரப்பு விரும்பவில்லை. மைதானத்தை வழங்க கூடாது என்பதில் கழக நிர்வாகத்திற்கு தொடர்ச்சியான மிரட்டல்களை விடுத்துள்ளனர். நேற்றைய தினம் மைதானத்தில் சண்டித்தனம் செய்ய முற்பட்ட இராமனாதன் தரப்பினை இளைஞர்கள் மைதானத்தை விட்டு வெளியேற்றி இருந்தார்கள்.

அங்கஜனின் தந்தையாரும் அவரின் சித்தாப்பாவும் வீதியில் நின்று கடுமையான வாய்த்தர்க்கம் பட்டதுடன் காவல் நிலையம் வரை பிரச்சனை சென்றிருந்தது.

இன்றைய தினமும் மைதானத்தை நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடியாது என்று அங்கஜன் தரப்பு வாயிலை பூட்டி திறப்பினை எடுத்து சென்றுள்ளனர். மைதான வாயில் இன்னும் திறக்க முடியாமல் வைத்திருக்கின்றார்கள்.

அங்கஜனின் சண்டித்தன அரசியலுக்கு மக்கள் பதிலடி கொடுக்காவிட்டால் அடிமை அரசியலுக்குத்தான் மக்களை பயன்படுத்துவார்கள் என தமிழரசு தரப்புக்கள் குரல் எழுப்பிவருகின்றன.

No comments