அங்கஜனின் அப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும் முரண்பாடு 


யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக மைதானத்தை பெறுவதில், அங்கஜனின் அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

நெல்லியடியில் உள்ள மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. 

அந்நிலையில் மைதானத்தில் எதிர்வரும் வாரம் எதிர்க்கட்சி தலைவரின் பிரச்சார கூட்டத்தினை நடாத்த  அங்கஜயனின் சித்தப்பா மைதானத்தினை கேட்டுள்ளார். 

மைதான நிர்வாகத்தினர் , தமக்கு அன்றைய தினம் வேறு நிகழ்வுகள் இருப்பதனால் மைதானம் தர முடியாது என மறுத்துள்ளனர். அதனால் அவர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கஜனின் சித்தப்பா நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

அந்நிலையில் ஜனாதிபதியின் நிகழ்வுக்கு மைதானத்தை பெற்ற அங்கஜனின் அப்பாவின் கவனத்திற்கு மைதான நிர்வாகம் இந்த விடயத்தை கொண்டு சென்றுள்ளனர். 

அதனை அடுத்து அங்கஜனின் அப்பா தனது தம்பியுடன்  முரண்பட்டு கொண்ட நிலையில், அங்கஜனின் அப்பா தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments